Print this page

பட்டினி ஊர்வலத்தில் எந்த பார்ப்பான் போகிறான்? விடுதலை-06.05.1954

Rate this item
(0 votes)

 

இந்த பார்ப்பனர்கள், தங்கள் மாட்டுக்குப் புல்லைத் தேடிக் கொண்டு இங்கே வந்து,நம்மைக் கோயிலைக் கட்டச்சொல்லி சாமியைச் செய்யச் சொல்லி-அந்தச் சாமியை நாம் தொட்டால் தீட்டு,சாமி செத்துப் போய்விடும் என்று சொல்லிவிட்டானே? இதை இந்தப் பணக்காரனும் பண்டிதனும் ஒப்புகொண்டதன் விளைவாக,நாம் இப்படி நாசமாகிவிட்டோம். மிரு கங்கள் இருக்கின்றனவே! அவற்றில் பார்ப்பாரக் கழுதை, பறைக் கழுதை என்று இருக்கின்றனவா?

உலகத்திலேயே மிகவும் தாழ்வாகப் பேசப்படுகின்ற கருதப்படுகின்ற மக்கள் நீக்ரோக்களாவர்.அவர்கள் காட்டில் திரிபவர்கள்; ஆடைகளுக்குப் பதிலாகத் தழைகளைக் கட்டிக் கொண்டு இருப்பார்கள். அவர்கள் உதடு தடித்திருக் கும். அவர்கள் இப்போது அமெரிக்காவிலிருக்கிறார் கள். அமெரிக்காவில் அவர்கள் ஜனத்தொகை ஒரு கோடியே முப்பது இலட்ச மாகும், அப்படிப்பட்ட மக்கள் இன்று 100க்கு90பேர் படித்திருக்கின்றார்கள். உலகத்தில் தாழ்ந்த காட்டு மிராண்டி, இன்றைக்கு எவ்வளவு முன்னேறி இருக் கிறான். இவர்கள் முன்னேறியது எல்லாம் கடந்த 150 வருடத்திற் குள்ளாகத்தான். இவர்கள் ஆட்களில் 100க்கு ஒருவன் வெள்ளைக்காரனைப் போலவே பி.ஏ. படித்திருக்கிறான். வெள்ளைக்காரனைப் போலவே அவனுக்குச் சரிசமமாக இருக்கிறான். ஆனால், இங்கு இன்று எல்லா உயர் பதவிகளும் பார்ப்பனருக்கேதானா? பிச்சை எடுக்க வந்தவன்தான் இன்று மந்திரி, பிரஸிடெண்ட், ராஷ்டிரபதி, சங்கராச்சாரி எல்லாம் அவன்தானே? அரசாங்கத்தில் உயர்ந்த பதவி, எதை எடுத்தாலும் பார்ப்பான்தானே இருக் கிறான்? எப்படி இந்த நிலை வந்தது?


நாளைக்கு ஒரு கம்யூனிஸ்டோ, சோஷ்யலிஸ்டோ வருவார்கள்.என்ன நேற்று இந்த ராமசாமி ஏதேதோ பேசினாராமே; மக்கள் உணவுக்கு, உடைக்கு, ஏதாவது பரிகாரம் கூறினாரா? என்பார்கள். நம் மட ஜனங்களும் அதை நம்புவார்கள்! நான் கேட்பதெல்லாம் ஏன் பிச்சை எடுக்கிறான் ?என்றுதான் கேட்கிறேன். ஏன் பட்டினி? யாருக்குப் பட்டினி! என்றுதான் கேட்கிறேன்.

இந்தக் கேள்வியை, அந்தக் கம்யூனிஸ்டைக் கேளுங்களேன். ஊரெல்லாம் பட்டினி;மக்கள் பட்டினி ஊர்வலம் போகிறார்களே, என்கிறார்கள். அப்படிப் போகிற பட்டினி ஊர்வலத்தில் எந்தப் பார்ப்பான் போகிறான்? நமக்கு கஞ்சிக்கு உப்பில்லை என்றால் அவன் சோற்றுக்கு நெய்யில்லை என்கிறான். நம்மவனுக்கு வேட்டியில்லை, கிழிந்ததையெல்லாம் ஒட்டி, வெட்டித் தைத்துக்கொண்டு கட்டி கொள் கிறான். பார்ப்பானுக்கா வேட்டி யில்லை? வேட்டி வாங்கித் தருப வனும் நம்முடைய பணக்காரன்! பார்ப்பனப் பெண்கள் 18 முழமல் லவா கட்டிக்கிறார்கள்? மொட்டைப் பார்ப்பனத்தியும் அல்லவா 18 முழம் கட்டுகிறாள்?



இராமியம்பட்டியில் 30.-05.-1954-ல் சொற்பொழிவு.

விடுதலை-06.05.1954

 

 
Read 60 times