Print this page

திருமணப் பதிவு எளிமையாக்கப்பட வேண்டும். விடுதலை - 27.5.1962

Rate this item
(0 votes)

தோழர்களே! இம்மாதிரித் திருமணங்களை எல்லாம் சிக்கன முறையில் நடத்த வேண்டும். ஊர் முழுவதும் சொல்லி, எல்லோரையும் அழைத்து, ஆடம்பரமாகச் செலவு செய்து திருமணம் செய்யக் கூடாது. இதிலும் பெரிய மாறுதல் அடையணும். இப்போது ரிஜிஸ்தார் முன்னிலையில் ரிஜிஸ்டிரார் ஆபீசுக்குச் சென்று, அங்குதான் இந்தப்படியான திருமணங்களைப் பதிவு செய்ய வேண்டும் என்று இருக்கிறது. இது கூடாது. எப்படிக் கிராமங்களில் ஜனன - மரணக் கணக்குப் பதிவு செய்ய, மணியக்காரர் - கணக்குப் பிள்ளையிடம் பதிவு செய்தால் போதும் என்ற நிலை இருக்கிறது. அப்படியே திருமணங்களையும் அவர்களிடையே பதிவு செய்தால் போதும் என்ற நிலை வரணும். அப்படித் திருமணத்தை அவரிடம் பதிவு செய்து கொண்டு உறவினர்கள், நண்பர்களுக்கு நாங்கள் இன்ன தேதியில் திருமணம் செய்து கொண்டோம் என்று கடிதம் மூலம் தெரிவித்தால் போதும். அல்லது பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்து விட்டால், ஆயிரக்கணக்கானவர்களுக்கும் விஷயம் தெரிந்து போகும் என்பதாகக் கூறி முடித்தார்.

25.5.1962 அன்று நச்சலூர் திருமண விழாவில், தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரை)

விடுதலை - 27.5.1962

 
Read 62 times