Print this page

எனக்குப் பின்பும் பிரச்சாரம் நீடிக்கும். விடுதலை - 22.1.1965

Rate this item
(0 votes)

தலைவர் அவர்கள் தனது உரையில் எனக்குப் பின் எனது புத்தகங்களே வழிகாட்டும் என்று குறிப்பிட்டார்கள். இந்த தொண்டும், பிரச்சாரமும் அறிவை மட்டும் சேர்ந்ததல்ல, உணர்ச்சியையும் சேர்ந்தது. அந்தப் பக்குவம் உள்ள ஒருவன் இருந்தால், அவன் அடுத்து தலைமையேற்க வருவான். அதுவரை யார் என்றால், இந்தப் புத்தகங்கள்தான் வேறு யாரும் வரக்கூடாது என்பதல்ல என் கருத்து. அந்தப் பக்குவம் உள்ளவனிருந்தால் அவன் வருவான்!

முகமது நபியைப் பார்த்து உங்களுக்குப் பின் யார்? என்று கேட்டதற்கு, அவர் எனக்குப் பின் வேறு யாருமில்லை என்று கூறி விட்டார். நான் அப்படிக் கூற விரும்பவில்லை. அறிவும், உணர்ச்சியும், துணிவும் உள்ள யார் வேண்டுமானாலும் வரலாம்.

விடுதலை - 22.1.1965

Read 68 times