Print this page

கோயமுத்தூரில் பஞ்ச நிவாரண வேலையும் ஸ்ரீமான் சி.வி. வெங்கிட்டரமணய்யங்காரும். குடி அரசு - செய்தி விளக்கம் - 09.05.1926

Rate this item
(0 votes)

கோயமுத்தூரில் பஞ்ச நிவாரண வேலைக்காக ரூ. 2102-8-0 செலவாகியிருக்கிறது. கிராமத்து ஜனங்கள் இந்தப் பணம் ஸ்ரீமான் வெங்கிட்டரமணய்யங்கார் தான் கையிலிருந்து செலவு செய்ததாக நினைக்கும்படி பல தந்திரங்கள் செய்ததோடு சில காங்கிரஸ் தொண்டர்கள் என்போரும் ஸ்ரீமான் ஐயங்கார் பின் சென்று ஓட்டு வாங்க, பஞ்சப்படி போட்ட ஐயங்கார் என்று அவருக்குப் பெயர் வாங்கிக் கொடுத்து கிராமத்து ஜனங்களை ஏமாற்றியிருக்கிறார்கள். இதன் இரகசியம் என்ன வென்றால் பஞ்ச நிவாரண வேலைக்காக பொது ஜனங்களிடமிருந்து வசூலாகி வந்த பணத்தை ஸ்ரீமான் எஸ்.சீனிவாசய்யங்கார் தூக்கி ஸ்ரீமான் வெங்கிட்டரமணய்யங்காரிடம் கொடுத்து, செலவு செய்யும்படி சொல்லியிருக்கிறார். அந்தப் பணத்தை வாங்கி, தான் செலவு செய்ததாக அவர் நடித்திருக்கிறார். இந்த நடிப்புக்கு காங்கிரஸ் தொண்டர்கள் திரைப்பிடித்து இருக்கிறார்கள். இவ்வளவுதான் இரகசியம். இதை 3-5-26 ² “சுதேசமித்திரன்” பத்திரிகையிலேயே பார்க்கலாம்.

குடி அரசு - செய்தி விளக்கம் - 09.05.1926

 
Read 14 times