Print this page

மகாத்மாவின் நன்றியறிதல். குடி அரசு - பெட்டிச் செய்தி - 02.05.1926

Rate this item
(0 votes)

சபர்மதியில் ராஜி ஒப்பந்தம் முடிந்த பிறகு ஸ்ரீமான் ஜெயக்கர் மகாத்மாவிடம் சென்று ”இந்த ராஜீயை உண்டு பண்ணியதிற்காக தங்களுக்கு நன்றி செலுத்துகிறேன்” என்று சொன்னாராம் . அதற்கு மகாத்மா “நானும் உங்களுக்கு நன்றியுள்ளவனாயிருக்கிறேன்” என்று சொன்னாராம். மகாத்மா எதற்காக இந்த விஷயத்தில் ஸ்ரீ ஜெயக்கருக்கு நன்றி செலுத்த வேண்டும் என்கிற கேள்வி இதில் பிறக்கக்கூடும்.

அது எதற்கு என்று யோசிப்போமானால், சுயராஜ்யக் கக்ஷியார் உத்தியோகம் ஒப்புக்கொள்ளாத தன்மையின் திருட்டுத்தனத்தை வெளியாக்கிய தற்காகத்தான்.

குடி அரசு - பெட்டிச் செய்தி - 02.05.1926

 
Read 45 times