Print this page

கொங்கு வேளாளர். குடி அரசு - செய்தி விளக்கம் - 21.03.1926

Rate this item
(0 votes)

மஹாநாட்டின் தீர்மானத்தின் பலன்

ஈரோடு தாலூக்கா வாயப்பாடி சாராயக்கடை 1-3-26 தேதி ஏலம் போடப்பட்டது. அவ்வூர் பிரபல மிராசுதாரரும் கொங்கு வேளாள குலத்தினருமான ஸ்ரீமான் ரத்தினசாமிக் கவுண்டர் குமாரர் முத்துசாமிக் கவுண்டர் ஏலமாகுமிடத்துக்கு விஜயம் செய்து வேளாளகுலத்தினர் யாரும் வாயப்பாடி சாராயக்கடையை எடுக்கக்கூடாதென்று கேட்டுக்கொண்டார். அவர் கேட்டுக்கொண்டதற்கிணங்கி, ஏலம் கூற வந்திருந்த வேளாள குலத்தினர் ஏலம் கூறாமல் நின்றுவிட்டனர். வேளாள குலத்தினர் நின்றுவிடவே மற்றெவரும் ஏலம் கூறவில்லை. அதிகாரிகள் என்ன முயற்சித்தும் ஒருவரும் கடை எடுக்க வில்லையென்று கேட்டு சந்தோஷிக்கிறோம்.

குடி அரசு - செய்தி விளக்கம் - 21.03.1926

Read 57 times