Print this page

கலெக்டர் கவனிப்பாரா? குடி அரசு - 28.09.1930

Rate this item
(0 votes)

கோபிசெட்டிபாளையம் டிப்டி கலெக்டரவர்கள் தேவஸ்தான மரங்களை கள்ளுக்கு விடும்படி தர்மகர்த்தாக்களை நிர்பந்திக்கிறாரென்றும், கள்ளுக்கடைக்காரர்களுக்கு மரம் கிடைக்காவிட்டால் மணியக்காரர்கள் மீது நடவடிக்கை எடுத்துக் கொள்ளுவதாகச் சொன்னதாகவும் நம்பத்தகுந்த இடங்களிலிருந்து செய்தி கிடைத்திருக்கிறது.

இது உண்மையானால் சர்க்காரிடத்தில் பொது ஜனங்களுக்கு துவேஷமும், பொது ஜனங்களுடைய வரிப்பணத்திலிருந்து வருடம் 4 லட்ச ரூபாய் செலவு செய்து சர்க்காரால் செய்யப்படும் மதுவிலக்கு பிரசாரத்தினிடத்தில் சந்தேகமும், கெட்ட எண்ணமும் ஏற்பட இடமுண்டாவதோடு சர்க்காருக்கு நல்ல பேர் கிடைக்கும் படியாகச் செய்யப்பட்டு வரும் பிரசார முதலியவைகளுக்கு இடஞ்சலும் ஏற்படுமாகையால் நமது ஜில்லா கலெக்டர் அவர்கள் தயவு செய்து இந்த விஷயத்தைக் கவனித்து இந்தப்படி நடப்பதை நிறுத்தவும்.

 

இந்தப் படிக்கில்லையானால் ஒரு அறிக்கை வெளியிடவும் முயற்சி செய்வாரென்று நம்புகிறோம்.

(குடி அரசு - துணைத் தலையங்கம் - 28.09.1930)

 
Read 59 times