Print this page

குரோதன வருஷத்தின் பலன். குடி அரசு செய்திக் குறிப்பு - 26.07.1925

Rate this item
(0 votes)

இவ்வருஷம் சங்கராந்தி வியாபாரிகளின் மேலும், லேவாதேவிக்காரர்கள் மேலும், ஜாதி ஆணவத்தின் மேலும் வந்திருக்கிறது போல் காணப்படுகிறது. ஏனெனில் ஒரு லட்சம், இரண்டு லட்சம் என்று லட்சக்கணக்கான துகைக்குச் சில வியாபாரிகளும், 25 லட்சம், 50 லட்சம், 75 லட்சம் என்று பத்து லட்சக்கணக்கான துகைக்கு லேவாதேவி செய்யும் சில நாட்டுக்கோட்டை செட்டிமார் முதலியவர்களும் தீவாளி ஆகிவருவதாகவும், பார்ப்பது தோஷம், தெருவில் நடப்பது தோஷம் என்கின்ற ஆணவத் தத்துவங்கள் அழிந்து வருவதாகவும், இன்னும் அடியுடன் அழியப் பொதுமக்கள் உணர்ச்சியுடன் முயற்சி செய்வதாகவும் பத்திரிகைகளில் பார்த்துவருகிறோம்.

குடி அரசு செய்திக் குறிப்பு - 26.07.1925

 
Read 65 times