Print this page

ஒரே திட்டம். குடி அரசு துணைத் தலையங்கம் - 17.05.1925

Rate this item
(0 votes)

காந்தியடிகள் சுயராஜ்யக் கட்சியின் திட்டத்தை அங்கீகரித்துவிட்டார் என்று கூறுவது உண்மைக்கு மாறுபட்டதாகும் என்று சென்ற வாரம் எழுதினோம். சித்தகாங்கில் மகாத்மா கூறிய அருள்மொழிகள் நமது கூற்றை உறுதிப்படுத்துகின்றன. அவை பின்வருமாறு :-

``போருக்கு என்றும் சளைக்காத ஒரு சாதியாரோடு நாம் சண்டையிடுகிறோம். அந்த ஜாதியார் பணிந்துபோவதென்றால் இன்னதென்று அறியார்கள். இராஜதந்திர முறைகளைக் கையாண்டு நாம் எவ்வளவுதான் முயன்றாலும் அவர்களை நாம் இந்தியாவைவிட்டு ஓட்டிவிடமுடியாது. நமது வெற்றிக்குச் சாதனமாக நான் தேசத்தார் முன் வைத்திருப்பது ஒரே திட்டந்தான். அஃது இராட்டையேயாகும்.’’

அரசியல் கிளர்ச்சி முறைகளில் காந்தியடிகளுக்கு எள்ளளவும் நம்பிக்கையில்லையென்பது இதிலிருந்து தெள்ளிதின் விளங்குகின்றதன்றோ?

குடி அரசு துணைத் தலையங்கம் - 17.05.1925

 
Read 39 times