Print this page

விடுமுறை வேலை. குடிஅரசு அறிவிப்பு - 24.04.1927

Rate this item
(0 votes)

விடுமுறை காலத்தில் பார்ப்பனரல்லாத மாணாக்கர்களும், வக்கீல்களும், தங்கள் நேரத்தை வீணாகச் செலவு செய்யாமலும், அனாவசியமாய்த் தங்கள் பணங்களைச் செலவு செய்துகொண்டு கண்டவிடங்களில் சுற்றித்திரியாமலும் தங்கள் தங்கள் ஊர்களில், கிராமங்களில் உள்ள பார்ப்பனரல்லாத மக்களுக்குப் பார்ப்பனரின் புரட்டுகளை விளக்கிப் பார்ப்பனீயத்தை ஒழிப்பதும், சுயமரியாதையின் தத்துவத்தை எடுத்துச் சொல்லுவதும், ஜஸ்டிஸ் திராவிடன் குடிஅரசு முதலிய பத்திரிக்கைகளுக்குச் சந்தாதாரர்களைச் சேர்ப்பதுமான வேலையிலேயே ஈடுபட வேண்டும். இதற்குத்தான் ஓய்வு கிடைத்திருக்கிறது. மாணவர்கள் படித்துத் தேறி இனி மேல் தேசத்திற்குச் செய்யப்போகும் துரோகத்திற்கும், வக்கீல்கள் செய்த, செய்து வருகிற, செய்யப்போகிற துரோகத்திற்கும் இதுவே பிராயச்சித்தமாகும்.

தந்தை பெரியார் -

குடிஅரசு அறிவிப்பு - 24.04.1927

 
Read 51 times