Print this page

ஒரு யோசனை (குடி அரசு - துணைத் தலையங்கம் - 06.07.1930)

Rate this item
(0 votes)

சென்ற மே மாதம் 25 தேதியின் மாலை 6 மலர் 4 இதழில் “ஒரு யோசனை” யென்னும் தலைப்பின் கீழ் குடி அரசு பத்திரிகையை எட்டு பக்கங்கள் குறைத்து சந்தாத் துகை வருஷத்துக்கு மூன்று ரூபாயாக இருப்பதை இரண்டு ரூபாயாக ஆக்கலாம் என்று கருதியிருப்பதை வெளிப்படுத்தி வாசகர்களின் அபிப்பிராயத்தையறிய ஆசைப்பட்டிருப்பதை வெளியிட்டிருந்தோம். அவற்றிற்கு வந்த பல அபிப்பிராயங்களில் சுமார் பத்துப் பேர் களேதான் அதற்குச் சம்மதம் கொடுத்திருக்கிறார்கள்.

சுமார் முன்னூற்றுக்கு மேற்பட்ட வாசகர்கள் பக்கங்களை எவ்வித காரணங் கொண்டும் குறைக்கக் கூடாதென்றும், சந்தா மூன்று ரூபாயாக இருப்பதைப் பற்றி கவலையில்லை யென்றும் தெரிவித்து வேறு சில யோசனைகளும் சொல்லி இருக்கிறார்கள். நிற்க,

 

மலாய் நாட்டுச் சந்தாதாரர்கள் கண்டிப்பாகப் பக்கங்களைக் குறைக்கக் கூடாதென்றும், சௌகரியப்பட்டால் அதிகப்படுத்தும் படியும் தெரிவித்திருக்கிறார்கள். ஆகவே வாசகர்களின் பெரும்பான்மையோர்களுடைய அபிப்பிராயம் மாறுபாடாயிருப்பதால் இது சமயம் அதாவது தற்காலம் குடி அரசு பத்திரிகையில் பக்கங்களையாவது சந்தாவையாவது மாற்றுவது என்கின்ற விஷயத்தை நிறுத்தி வைத்திருக்கிறோமென்பதை தெரியப் படுத்திக் கொள்கிறோம்.

(குடி அரசு - துணைத் தலையங்கம் - 06.07.1930)

 
Read 47 times