Print this page

அறிவிப்பு (குடி அரசு - அறிவிப்பு - 25.05.1930)

Rate this item
(0 votes)

இரண்டு ஆண்டுகட்கு முன்னர் திருநெல்வேலி திரு. கே. சுப்ரமண்யம் என்பவர் இந்தியாவில் நமது இயக்கத்தின் பெயரையும் நம்முடைய பெயரையும் உபயோகப்படுத்தி அதன் பயனாய் அநேக தவருதல் செய்ததாக தெரியவந்து, அதை பத்திரிகையில் வெளிப்படுத்தி இருந்தோம்.

பின்னர் திரு. சுப்ரமண்யம் அவர்கள் இந்தியாவிலிருந்து மலாய் நாடு சென்று அங்கிருந்து நமக்குதான் ஏதோ தவருதலாய் சில காரியம் செய்து விட்டதற்கு வருந்துவதாகவும், அதை மன்னிக்க வேண்டுமெனவும் இனி இந்த மாதிரியான எந்த குற்றங்களும் செய்வதில்லை என்றும் நீண்டதொரு மன்னிப்புக் கடிதம் எழுதியிருந்தார்.

 

நாமும் அவர் இனிமேல் திருந்திவிடுவாரென நம்பியே இருந்தோம். ஆனால் நாம் மலாய் நாடு சென்று திரும்பிய பின் நமக்கு பினாங்கிலிருந்து ஒரு முக்கிய நண்பரிடமிருந்து வந்திருக்கும் கடித வாயிலாக திரு. சுப்ரமண்யம் அவர்கள் மீண்டும் மலாய் நாட்டில் தவறுதலானவும் மோசடியானதுவுமான குற்றங்கள் பல செய்துவிட்டு வேறு எங்கேயோ சென்று விட்டதாகத் தெரிய வருகிறது.

ஆதலால் திரு. சுப்ரமண்யம் அவர்கள் இந்தியாவிற்கு வந்திருந்தாலும் அல்லது வேறு எந்த நாட்டிலிருந்தாலும் இதைப் பற்றி நமக்கு சரியான சமாதானம் எழுதாவிட்டால், அவசியம் அடுத்த வாரம் அக்கடிதம் பிரசுரிக்க வேண்டி வரும் என்பதைத் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

(குடி அரசு - அறிவிப்பு - 25.05.1930)

 
Read 48 times