Print this page

ஆதி திராவிடர்களுக்கு பிரைஸ் (குடி அரசு - துணைத் தலையங்கம் - 23.03.1930)

Rate this item
(0 votes)

இவ்வார சென்னை சட்டசபை வரவு செலவு திட்டத்தில் திரு. வி.ஐ. முனுசாமி பிள்ளை அவர்கள் ஆதிதிராவிடர்களுக்கு அவர்கள் எண்ணிக்கைக்கு தகுந்தபடி உத்தியோகமளிப்பதில்லை என்று குறை கூறியதற்கு பதிலாக அரசாங்கத்தார் சார்பாக சீப் சிக்கர்ட்டரி அவர்கள் அந்தப்படி உத்தியோகங்கள் கொடுக்கும் விஷயமாக அரசாங்கத்தாரால் யோசனைகள் செய்யப்பட்டு வருவதாகவும் உத்தியோகங்களைப் பெற்றுக் கொள்ள ஆதி திராவிடர்கள் முன் வரவேண்டுமென்றும் பதில் கூறினார்கள்.

இது மனப் பூர்வமாய் சொல்லப்பட்ட பதிலானால் இதிலிருந்து இப்போது எல்லா விதத்திலும் தகுதியுடன் இருந்து முன் வந்திருக்கும் திரு. ராவ் பகதூர் யம். சி. ராஜா அவர்களுக்கு சமீபத்தில் காலியாகும் நிர்வாகசபை மெம்பர் பதவி கிடைக்கக் கூடும் என்று எதிர்பார்ப்பது ஏமாற்றமாகாது என்று நினைக்கின்றோம்.

(குடி அரசு - துணைத் தலையங்கம் - 23.03.1930)

 
Read 72 times