Print this page

திரு. R.S. மலையப்பன் I.A.S. அவர்களும் திருச்சி ஜில்லா பொதுமக்களும். விடுதலை - 27.10.1956

Rate this item
(0 votes)

சென்னை உயர்நீதி மன்ற நீதிபதிகள் திரு.பி.ராஜகோபாலன் அய்யங்காரும், திரு.என். ராஜகோபாலய்யங்காரும், திருச்சி வில்லா கலெக்டர் புதுவிவசாயிகள் சட்டம் அமலாகுமுன்னரே மிராசுதார்களுக்கு விரோதமாகப் போலீஸ் பந்தோபஸ்துக் கொடுத்து உழவர்களை வயலிலிருந்து நீக்காமல் விவசாயம் செய்ய உத்தரவிட்டது சட்ட விரோதமென்றும், அவ்வாறு உத்தரவிட்டதால் கலெக்டர் உத்யோகத்திற்குத் தகுதியற்றவராகி விட்டாரென்றும் தீர்ப்புக் கூறிவிட்டார்கள்.

சென்னை உயர்நீதி மன்ற நீதிபதிகள் திரு.பி.ராஜகோபாலன் அய்யங்காரும், திரு.என். ராஜகோபாலய்யங்காரும், திருச்சி வில்லா கலெக்டர் புதுவிவசாயிகள் சட்டம் அமலாகுமுன்னரே மிராசுதார்களுக்கு விரோதமாகப் போலீஸ் பந்தோபஸ்துக் கொடுத்து உழவர்களை வயலிலிருந்து நீக்காமல் விவசாயம் செய்ய உத்தரவிட்டது சட்ட விரோதமென்றும், அவ்வாறு உத்தரவிட்டதால் கலெக்டர் உத்யோகத்திற்குத் தகுதியற்றவராகி விட்டாரென்றும் தீர்ப்புக் கூறிவிட்டார்கள்.

பத்திரிகைகள் இந்த தீர்ப்பை வெளியிட்டதல்லாமல் 'இந்து' என்ற பார்ப்பனப் பத்திரிகை தலையங்கமும் எழுதிவிட்டது.

உயர்நீதிமன்றத் தீர்ப்பு யாவராலும் மதிக்கப்பட வேண்டிய தாகும். நாமும் அதற்கு அடிபணிவோம், அதை ஒப்புக் கொள்ளுகின்றோம் கலெக்டர் பதவிக்குத் தகுதியற்றவர், ஆம்!

திருச்சி ஜில்லாவில் கலெக்டர் திரு, மலையப்பன் அவர்களைப் பலகாலமாக பார்ப்பனர்களும் சிலபெரிய மிராசுதாரர்களும் கேவலமாகப் பேசிவந்தார்கள், அவரை ஜில்லாவை விட்டு மாற்றவேண்டுமென்றும் பெரு முயற்சிகள் செய்யப்பட்டன.

நான் இந்த ஜில்லாவில் வசிப்பவன்; பொதுஜனங்கள் திரு.மலையப்பன் அவர்கள் பற்றி என்ன அபிப்பிராயம் கொண்டிருக்கின்றார்களென்பதைத் தெரிவிக்கவே இக்கடிதம் எழுதுகின்றேன்.

திரு. ஆர். எஸ். மலையப்பன்

ஒரு உண்மையாளர், 

நேர்மையாளர், 

ஏழைப்பங்காளி, 

உயர்பண்புடையவர், 

நல்ல உழைப்பாளி, 

நாணயம் மிகுந்தவர்,

 தாழ்த்தப்பட்ட மக்கள் மீது இரக்கமுடையவர். 

மக்கள் மீது அன்பு கொண்டவர்.

உயர்நீதி மன்றத் தீர்ப்பு அவர் உத்யோகம் தகுதியற்றவரென்று சொல்லியிருந்தாலும் மேலே - பட்ட குண விசேஷங்களை யாரும் மறுக்க முடிய திரிபுரமெரித்த செஞ்சடைக்கடவுளாலும் முடியாது.

இக்காலத்தில் மிக மிக நல்லவர்கள் அரசாங்க அவ களுக்கு தகுதியற்றவர்களாவதைப் பார்க்கின்றோம். இன் பார்க்க நம் மனம் புண்படுகின்றது; நாமென்ன செய்யலாம். காலத்தின் கோலம்தான். மேலும் பின்தங்கிய வகுப்பிலிரும். இவர் ஒருவர்தான் ஜில்லா கலெக்டராக பணியாற்றுபவர். என் போன்ற பின்தங்கியவர்கட்கு இது பெரும் வேதனை. இம்மாதிரி காலங்களில்தான் கடவுள் ஒருவர் இருக்கின்றாரா, அப்படியிருந்தால் அவர் கண் பார்வையும் காது கேட்பதும் சரியாகவிருக்கின்றதோவென்ற சந்தேகமும் எழுகிறது.

திரு. மலையப்பன் அவர்களுக்கு - நீங்கள் சட்டப்படி நடக்கவில்லை ; ஆம். நியாயப்படி நடந்திருக்கலாம். அதுவேறு. நம் கோர்ட்டுகள் சட்டக் கோர்ட்டுகள். ஒருவன் ஒரு பெண்ணைக் காதலித்து திருமணம் செய்துகொண்டு ஒழுங்காக வாழலாம், ஆனால் பார்ப்பானைக் கொண்டு சடங்குகள் செய்யவில்லையானால், சட்டப்படி திருமணமாகாது.* சட்டப்படி அவன் மனைவி வைப்பாட்டிதான். எத்தனை வைப்பாட்டிகள் தமிழ்நாட்டில்? சட்டப்படி சட்டத்திற்கும் நீதிக்கும் பெரும் வித்தியாசம். ஆகவே கவலை வேண்டாம்.

வாழ்க மலையப்பன்!

வெல்க அவர் பண்பும் பணியும்!

 ஓங்குக நியாயமும் நீதியும்!

-தி. பொ. வேதாச்சலம்.

 விடுதலை - 27.10.1956

Read 109 times