எதையும் சிந்திக்கும் குணம் மக்களுக்கு இருக்க வேண்டியது அவசியம். அக்குணம் நமக்கு இல்லாததால்தான் மற்ற நாடுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் நம் நாட்டில் ஏற்படவில்லை. யார் எதை சொன்னாலும் காது கொடுத்துக் கேட்க வேண்டும். நமது பெரியார் வள்ளுவர் சொல்லியிருக்கிறார்;
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும்
அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு"
என்று ஆகவே, சிந்தித்து உண்மையைக் கண்டுபிடிப்பது தான் அறிவுடைமைக்கு அடையாளம். மற்றுமோர் குறளில், .
"எப்பொருள் எத்தன்மைத்தாயினும்
அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு''
என்று எழுதியுள்ளார்.
சிந்தித்தால் பாவம், நினைப்பதும் பாவம் என்று அடக்கி வைத்து இருக்கிறார்கள் சில கூட்டத்தார்! எந்தத் தன்மையுடைய தனாலும் சரி ஆராய வேண்டும். ஆனால் சில விஷயங்களில் அதாவது கடவுள், சாஸ்திரம், புராணம், இதிகாசம் முதலிய வற்றை ஆராய்வதில் நம் அறிவு பயன்படுத்தப்படுவதில்லை. இது எப்படிப்பட்ட அடக்குமுறை? சொந்த அறிவை உபயோ கித்தால் உபயோகிப்பவன் “நாஸ்திகன்", அவன் பாவி, அவன் வெளியேற்றப்பட வேண்டும் என்பது நீதியா? ஆகவேதான் நான் சொல்லுகிறேன், கடவுள் துறையிலே நாம் காட்டுமிராண்டி களாகிவிட்டோம். இந்த முறை பழங்காலத்தில் இருந்தது என்றா லுங்கூட இப்போதுள்ள ஜனநாயக ஆட்சியிலுங்கூட காட்டுமி ராண்டிகளாகவே வாழ வேண்டுமா?
எங்களைத் தவிர இதைக் கேட்பதற்கு யார் இருக்கிறார்கள்? புத்தரும் வள்ளுவரும்தான் அறிவுக்கு ஏற்றதை எடுத்துக் கொண்டு மற்றதைத் தள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்கள்! பெரிய பெரிய ரிஷிகள் மகாத்மாக்கள் யாருமே சிந்திக்கச் சொன்னது கிடையாதே. வேண்டுமானால் அவர்கள் சொன்ன தையெல்லாம் நம்ப வேண்டும் என்றுதான் சொல்லியிருப்பார் கள். நமக்குத் தெரிய இரண்டு பேர்தான் சொல்லியிருக்கிறார்கள்.
“சாஸ்திரம் சொல்லியிருந்தாலும் சரி, தெய்வ சக்தியுள்ளவன் சொல்லியிருந்தாலும் சரி உன் அறிவினால் ஆராய்ந்து பார்" என்றார் புத்தர்!
நமது கொள்கைகளில் முக்கியமானது அறி வைக் கொண்டு சிந்திப்பதேயாகும். உதார ணமாக நாம் ஒரு ஜவுளிக் கடைக்குத் துணி வாங்கப் - போவோமானால் நாம் வாங்கப் போகும் துணியின் நீள அகலமென்ன, எந்த நெம்பர் நூலில் நெய்தது, சாயம் நிற்குமா என்றெல்லாம் அறிந்து கொண்டுதானே விலைக்கு வாங்குகிறோம். ஆனால், "பஞ்சகவ்யம்'' என்ற பேரால் பார்ப்பான் சாணியைக் கரைத்துக் கொடுத்தால் பேசாமல் வாங்கிக் குடிக்கிறோமே!
எனவேதான், அறிவு சம்பந்தப்பட்டவகையில் நாம் இன்னும் காட்டுமிராண்டிகளாகவே ஆகிவிட்டோம்.
சக்தி முக்கிக் கல்லால் தீயுண்டாக்கிய காலத்திலிருந்து லட்சம் கேண்டில் பவர் விளக்கு எரிகிற அளவுக்கு விஞ்ஞானத்தில் அறிவுத்துறையில் மாறுதல் ஏற்பட்டிருக்கிறது. கட்டை வண்டி காலத்திலிருந்து ஏரோப்ளேன் வரையில் வாகனங்களில் மாறுதல் ஏற்பட்டுள்ள இக்காலத்தில் நாம் பண்பாட்டில் என்ன மாறுதல் அடைந்திருக்கிறோம்?
திராவிடர்களாகிய நாம் கடவுள் துறையில் முட்டாள்களாகவே இருக்கிறோம். மற்ற நாடுகளிலும் மதம், கடவுள், சாஸ்திரம் | இல்லாமலில்லை. ஆனால், மற்ற நாட்டுக் கடவுள்களைவிட நம் நாட்டுக் கடவுள்கள் கூடுதலான காட்டுமிராண்டித்தனமா னவை. உலக மக்கள் தொகையில் கணிசமான அளவு நாஸ்திகர் கள்! மற்றவர்களில் கிறிஸ்துவர்களும், முஸ்லீம்களும் தமக்கென ஒரே கடவுளைக் கொண்டவர்கள்! கிறிஸ்துவருடைய கடவுளும் முஸ்லீமுடைய கடவுளும் உருவமில்லாதது, ஒன்றும் வேண்டா தது! ஆனால், நமது கடவுள்களுக்கு இதில் எந்தத் தன்மையா வது இருக்கிறதா? 1958-லுமா நாம் இப்படி இருக்க வேண்டும்?
பார்ப்பான் நினைத்தபடியெல்லாம் கடவுள்கள் தோன்றியபடி இருக்கின்றனவே! மனிதக் கடவுள், மாட்டுக் கடவுள், குரங்குக் கடவுள், பட்சிக் கடவுள், பல தலைகளுள்ள கடவுள்! ஏன் இவைகள்? எல்லாம் வல்ல எங்கும் நிறைந்தவையுமான கடவுள் என்கிறபோது ஏன் இத்தனைக் கடவுள்கள்? பிறப்பு இறப்பு இல்லாதவன் கடவுள் என்ற பிறகு தாய் வயிற்றில் பிறந்தவன் கடவுள் ஆக முடியுமா? இராமன் யார்? தாய் வயிற்றில் பிறந்தவன்தானே? கிருஷ்ணன் யார்? அவ னும் ஒரு தாய் வயிற்றில் பிறந்தவன்தானே? சுப்பிரமணியன் - அவனுக்கும் தாய் தகப்ப னார் இல்லையா? இந்தக் கடவுள்களுக்கெல் லாம் எத்தனை கோயில்கள்? எத்தனை வேளை பூசைகள்? எத்தனை கல்யாணங் கள்? எத்தனை தேவடியாள்மார்? இதெல் லாம் போதாதென்று தாசி வீட்டுக்கு வேறு தூக்கிக் கொண்டு போகிறானே!
இந்த நிலைமைகளெல்லாம் நாம் காட்டுமிராண்டிகளாக இருப் பதால்தானே இன்னும் இருந்து கொண்டிருக்கிறது? சென்ற ஆண்டு செய்த கல்யாணம் என்ன ஆயிற்று என்று யாராவது கேட்கிறார்களா? நாம் எல்லாம் முட்டாள்கள் என்பதால்தான் இவற்றையெல்லாம் ஏற்றுக்கொண்டு விட்டோம். சந்திரனுக்கு பறக்கின்ற இந்தக் காலத்தில் கடவுள் என்ற ஒன்று எங்காவது இருக்குமானால் கண்டுபிடித்துவிட மாட்டார்களா? நம்மைவிடக் காட்டுமிராண்டிகளாக இருந்தவர்களெல்லாம் முன்னேறி விட் டார்கள். இந்த காலத்தில் நாம் சாமிக்குக் கல்யாணம் செய்து கொண்டிருப்பதா? எங்களுரிலுள்ள ஒரு சாமிக்கு ஒன்றரை மூட்டை அரிசியைப் போட்டு ஒரு வேளைக்கு சமைத்துப் படைக்கிறார்கள். சாமியா தின்கிறது? பார்ப்பான் தின்கிறான். மற்றவனை தேவடியாள் மகன் என்று கூறுகிறான்.
கிருஷ்ணனுக்கு எத்தனை மனைவிமார்? கொல்லுவது, சம்ஹாரம் செய்வது தானே கிருஷ்ணனின் வேலை? இராமன் அயோக்கியன் ஒரு பெண்ணின் மூக்கையும் முலையையும் அறுக்குமளவுக்கு அவள் என்ன அவ்வளவு பெரிய தவறு செய்து விட்டாள்? கடவுள்களுக்கு கொலை ஆயுதங்கள் ஏன்? 1958-ல் கூட உன் கடவுள் இப்படியா? இராமாயணத்தைப் புண்ணிய சரித்திரம் என்கிறாய்! கிருஷ்ண பரமாத்மா பூமிபாரம் தீர்த்தவன் என்கிறாய்! சர்வ வல்லமையுள்ள உன் கடவுள் வேறொருவன் தன் மனைவியைத் தூக்கிக் கொண்டு போய்விட் டதற்காக ஒப்பாரி வைத்து அழுகிறானே, இப்படியும் கடவுள் கதை எழுதுவதா?
ஆண்கள் தான் அந்த சாமியைக் கும்பிடப் போகிறார்கள் என்றால் பெண்களை அவமானப்படுத்திய அதை எதற்காகப் பெண்கள் கும்பிடப் போக வேண்டும்? வெட்கப்பட வேண் டாமா? ஆகவே நாம் கடவுள் மதம் சாஸ்திரம் சம்பந்தமாக அறிவே இல்லாத முட்டாள்களாகவே இருக்கிறோம்.
எந்த நாட்டிலாவது சூத்திரன், பறையன் இருக்கிறானா? மிகமிகப் பிற்போக்காயிருந்த நீக்ரோக்காரன் படித்திருக்கிறானே. நம்மில் படித்தவர் எத்தனை பேர்? பார்ப்பான் இந்த நாட்டில் பிழைக்க வந்தவன். நான் சொல்ல வில்லை; ஜவஹர்லால் நேருவே தன் வாழ்க் கைச் சரித்திரத்தில் "பிழைக்க வந்தவர்கள் தாம்" என்றே எழுதியிருக்கிறார். இன்றுகூட "நான் ஏன் சூத்திரன்? என்று கேட்க ஆளில்லையே. இதே பார்ப்பான் சீமையிலே இருந்துகொண்டு நீ நீசன், இழிமகன், கீழ்ஜாதி என்று சொன்னால் இவனை விட்டு வைத்திருப்பானா? நாம்தான் அப்படிச் சொல்லுகிறவன் காலி லேயே விழுகிறோம்.
இங்குதாம் நாமும் அவனும் வாழ்கிறோம். வேறு நாட்டில் வாழ முடியுமா? பணம் கொடுக்காதவன், பாடுபடாதவன் 100-க்கு 100 பேர் படித்திருக்கிறான்! பணம் கொடுக்கிறவன், பாடுபடுகிறவன் 100-க்கு 12 பேர் படித்தவன் எனில் எவ்வளவு அநியாயம்? இவனுக்கு பியூன் வேலை, மலம் அள்ளுகிற வேலை,. கூட்டுகிற வேலை, கல்லுடைப்பது, மாடுமேய்ப்பது, ஏர் உழுவது போன்ற வேலைகள், பாட்டாளி மகனுக்கு ஏன் இந்த கதி? நாம்தான் உழுகிறோம், உணவுப் பண்டங்களை உண்டாக்குகிறோம், வெளுப்பது முதலான எல்லா வேலைக ளையும் செய்கிறோம். அவன் ஏர் உழுவதே பாவம் என்கிறான். ஏன் இதை மாற்றக்கூடாதா? கடவுள் அப்படித்தான் பிறப்பித் தார் என்றால் அத்தகைய பட்சபாதகமான கடவுள் நமக்கு ஏன்? யார் கேட்டார்கள்? நாம் காட்டுமிராண்டித் தன்மையிலேயே வாழ்வதா? இந்த முறையை மாற்ற முடியவில்லையென்றால் சாகவேண்டியதுதான்.
சாதியைக் காப்பாற்றுவது மதமாகட்டும், கடவுளாகட்டும், சாஸ்திரமாகட்டும், அரசாங்கமாகட்டும் எதுவானாலும் சரி அது ஒழிக்கப்பட வேண்டியதுதான்.
(29.11.1958-ல் பெங்களூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய உரையில் ஒரு பகுதி) - விடுதலை 13.12.1958