Print this page

50 வருஷத்திற்கு முன் சுயமரியாதை இயக்கம் (குடி அரசு - வேண்டுகோள் - 16.02.1930)

Rate this item
(0 votes)

சுமார் 40, 50 வருஷத்திற்கு முன் பதிப்பித்ததும், இந்து மத ஆச்சார ஆபாச தரிசினி என்ற பெயர் கொண்டதும், 762 பாடல்களை உடையதும். கிரௌவுன் ஒண்ணுக்கு எட்டு சைசில் 120 பக்கங்களை உடையதுமான ஒரு தமிழ் புத்தகம் எங்கேயாவதும், யாரிடத்திலாவதும் கிடைக்குமானால் தயவு செய்து வாங்கி உடனே நமக்கு அனுப்பிக் கொடுக்கும்படி வேண்டிக் கொள்ளுகின்றோம்.

ஏனெனில் அப்புத்தகம் ஒன்று நமக்கு ஒரு மாதத்திற்கு முன் ஒரு நண்பரால் அனுப்பப்பட்டிருக்கின்றது. ஆனால் அது மிக்க பழயதாகவும் முதலிலேயே சில பக்கங்கள் இல்லாமலும் சில பக்கங்கள் கிழிந்தும் சரிவரத் தெரியாமலும் இருப்பதால் கிழியாத புத்தகம் ஒன்று வேண்டியிருக்கிறது. அப்புத்தகம் நமது இயக்கக் கொள்கைகளையே முக்கியமாய் வைத்துப் பாடின பாட்டுகள் அனேகம் அதில் இருக்கின்றன.

ஈ.வெ.ரா.

(குடி அரசு - வேண்டுகோள் - 16.02.1930)

Read 70 times