Print this page

ஐய வினாவுக்கு விடை (குடி அரசு - பத்திராதிபர் குறிப்பு - 15.09.1929)

Rate this item
(0 votes)

மோட்சம், நரகம் என்பன யாவை?

ஸ்ரீரெங்கநாதபுரம் அ.வெ.சுப்பையா அவர்கள் மோட்சம் நரகங்களைப் பற்றிக் கூறுவதின் உண்மையை அறிய விரும்புகின்றார். மோட்சம் என்பது இன்ப வீடும், நரகம் என்பது துன்ப வீடுமாம். இவைகளை இவ்வுலகத்தில் இவ்வாழ்க்கையில் நாம் என்றும் அநுபவிக்கின்றோம்.

இதற்கு மாறுபாடாக எங்காயினும் மோட்சம் நரகம் உளவோயின், அவைகளை அநுபவிக்க விரும்புபவர்கட்கும் நமக்கும் யாதொரு தொடர்பும் இல்லை. நாளை கிரகம் என்று ஒன்றுள்ளது என்று ஒரு நூலில் நாம் காண்போமாயின், அது எங்குள்ளது என்று தேடப் புறப்படுவது, கிரகம் என்ற ஒன்றை புகுத்திய அறிவிலாச் செயலிலும் தேடப்புறப்படுவோர் செயல்மிக்க அறிவிலாததாகும்.

( ப-ர்.)

(குடி அரசு - பத்திராதிபர் குறிப்பு - 15.09.1929)

 
Read 60 times