Print this page

வாழ்க! வாழ்க!! டாக்டர் சுப்பராயன் வாழ்க!!! (குடி அரசு - துணைத் தலையங்கம் - 12.05.1929)

Rate this item
(0 votes)

முதல் மந்திரி கனம் டாக்டர் சுப்பராயன் அவர்கள் நாம் எதிர்பார்த்தது போலவே தமது ஆதிக்கத்தில் உள்ள இலாக்காக்கள் மூலம் நமது பெண்மணிகளுக்கு மூன்றாவது பாரம் வரையில் இலவசமாய்க் கல்வி கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்து இருக்கிறார் என்ற செய்தியைப் பார்க்க மிகவும் மகிழ்ச்சி அடைந்து போற்றுவதுடன் மனமார வாழ்த்துகின்றோம். மற்றும் தீண்டாதவர்கள் என்பவர்களுக்கும் விதவைகள் என்பவர்களுக்கும் கல்வி விஷயத்தில் ஏதாவது உதவி செய்வதுடன், பெண்கள் உபாத்தியாயர்கள் ஆவதற்குத் தகுந்தபடி ஏராளமான போதனாமுறைப் பாடசாலைகளையும் ஏற்பாடு செய்ய வேண்டுமாய் விழைகின்றோம்.

(குடி அரசு - துணைத் தலையங்கம் - 12.05.1929)

 
Read 63 times