Print this page

ஓர் புதிய கோயில் (குடி அரசு - செய்தி விளக்கம் - 17.02.1929)

Rate this item
(0 votes)

மேட்டூரில் ஓர் புதுக்கோவில் கட்டி, அங்கு பிள்ளையாரையும் ஆஞ்சனேயரையும் பிரதிஷ்டை செய்யும் நோக்கத்தோடு 11-2-29 காலை 10 மணிக்கு அஸ்திவாரம் நாட்டினார்கள். இக்கோஷ்டிக்குத் தலைவர் திரு. மகா தேவய்யரவர்கள் பி.ஏ. பி.இ. எக்ஸிக்யூடிவ் இஞ்சினீர்.

ஆராய்ச்சித் திறமுள்ள இஞ்சினீர்களுக்கு கோவில்களைப் பெருக்கக் கருத்தோடியதின் அர்த்தமென்ன? ஏழைக் கூலிகளுக்கும் அவர்கள் பிள்ளைகளுக்கும் உபயோகப்படும் இராப்பள்ளிக்கூடம் வைக்க ஏற்பாடு செய்யக் கூடாதா? கோவில் கட்டுவது பார்ப்பனரல்லாத ஏழைப் பாமர மக்களைப் பிரித்து வைத்து ஏமாற்றித் தம்மினத்தவர்கள் பார்ப்பனரல்லாதார் செலவில் உண்டு கொழுப்பதற்கல்லவா?

(குடி அரசு - செய்தி விளக்கம் - 17.02.1929)

 
Read 72 times