Print this page

நமது பத்திரிக்கை (குடி அரசு - முக்கிய குறிப்பு - 23.12.1928)

Rate this item
(0 votes)

‘குடி அரசு’ பத்திரிகையானது அபிமானிகள் பெருக்கத்தால் வாராவாரம் கிட்டத்தட்ட 10000 பதினாயிரம் பிரதிகள் வரை பதிப்பிக்க வேண்டியிருப்பதாலும், சமீப காலத்திற்குள் பதினாயிரம் பிரதிகளுக்கு மேல் அச்சுப்போட வேண்டியிருக்குமாதலாலும். தற்போது நம்மிடம் இருக்கும் அச்சு இயந்திரம் அவ்வளவு பிரதிகள் அச்சியற்ற போதுமானதாய் இல்லாததாலும், இதற்காக வாங்கப்பட்ட மற்றொரு பெரிய அச்சியந்திரம் ‘திராவிடன்’ பத்திரிகையின் வாசகர்களின் பெருக்கத்தால் ‘திராவிட’னுக்கு வேண்டியிருந்ததாலும் கொஞ்ச நாளைக்கு “குடி அரசை” 16 பக்கத்துடனே வெளிப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டு விட்டது. என்றாலும் இதனால் வாசகர்களுக்கு அதிகமான குறை ஏற்படாதிருக்கும் பொருட்டு இப்போது விளம்பரத்திற்காக உபயோகப்படுத்தி வரும் சுமார் 7, 8 பக்கங்களை இனி 3 அல்லது 4 பக்கங்களுக்கு அதிகப்படாமல் செய்து விட்டு சற்றேக்குறைய 12 அல்லது 13 பக்கங்களுக்கு குறையாத விஷயங்கள் வெளியாக்க உத்தேசித்திருக்கின்றோம். இதனால் ஒரு சமயம் விளம்பர வியாபாரிகளுக்கு சற்று அதிருப்தி இருக்கலாம்; ஆனாலும் அவர்களையும் திருப்தி செய்ய சீக்கிரத்தில் ஏற்பாடு செய்யப்படும்.

குறிப்பு: நிரூப நேயர்களுக்கு இனி கண்டிப்பாய் இடம் ஒதுக்க முடியாததற்கு வருந்துகிறோம். அவசியம் என்று தோன்றியவைகளுக்கு மாத்திரம் சற்று இடம் கொடுக்கலாம். ஆனாலும் நிரூப நேயர்கள் வெறும் வர்த்தமானத்தை அனுப்பாமல் இருக்க வேண்டுகிறோம்.

(குடி அரசு - முக்கிய குறிப்பு - 23.12.1928)

 
Read 52 times