Print this page

கோவையில் சர்வகக்ஷி மகாநாடு. (குடி அரசு - சிறு குறிப்பு - 18.11.1928)

Rate this item
(0 votes)

கோயமுத்தூரில் இம்மாதம் 23-ஆம் தேதி அகில இந்திய சர்வகக்ஷி மகாநாட்டு அரசியல் திட்டம் என்பதைப் பற்றி யோசிக்க ஒரு சர்வகக்ஷி மகாநாடு கூடப் போகின்றது. அதற்கு காரியதரிசி திரு. R.K. ஷண்முகம் செட்டியார் M.L.A. அவர்களாவார்கள். அதன் வரவேற்புத் தலைவர் திரு. C.S. இரத்தினசபாபதி முதலியாரவர்கள் ஆ.டு.ஊ. ஆவார்கள். மகாநாட்டு தலைவர் சென்னை திரு. சாமி வெங்கிடாசலம் செட்டியார் ஆ.டு.ஊ. ஆவார்கள்.

எனவே மேல் கண்ட மூன்று கனவான்களும் பார்ப்பனரல்லாதார் என்பதில் நாம் எவ்வித ஆட்சேபனையும் சொல்ல முடியாது. ஆனால் பார்ப்பனர்களுக்கும் பாமர ஓட்டர்களுக்கும் பயப்படாமல் தைரியமாய் தங்கள் சமூகத்திற்கும் தங்கள் நாட்டின் ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களின் சமூகத்திற்கும் உண்மையான யோக்கியமான பிரதிநிதிகளாய் இருந்து அவர்களின் கஷ்ட நஷ்டம் முதலிய கொடுமைகளை தைரியமாய் எடுத்துச் சொல்லி அதற்கு வேண்டியதை வலியுறுத்துவார்களா? என்பவைகளை மாத்திரம் மகாநாட்டின் நடைமுறைகளுக்குப் பின் முடிவு செய்ய வேண்டியிருக்கிறது என்றாலும் இன்னிலையில் அம்மூன்று கனவான்களையாவது உத்தேசித்து மகாநாட்டுக்கு எல்லோரும் போய் தங்கள் தங்கள் அபிப்பிராயத்தை தாராளமாய்ச் சொல்வதற்கும் வலியுறுத்துவதற்கும் முடியாமல் போனாலும்கூட சாக்ஷியினராகவாவது சென்று அக்கனவான்களை கௌரவப்படுத்த வேண்டுகின்றோம்.

(குடி அரசு - செய்திக் குறிப்பு - 18.11.1928)

 

இதற்கு என்ன வால் என்று பெயர்

திரு. நேரு, திரு சீனிவாசய்யங்கார் ஆகிய இருவரையும் ஆதரிப்பவர்களுக்கு வெளவால் என்கின்ற பெயரானால், திரு. நேருவும், திரு சீனிவாசய்யங்காரும், திரு. பெசண்டம்மையும் ஆகிய மூவரை திருட்டுத்தனமாக ஆதரிப்பதற்கு என்ன வால் என்று சொல்லுவது?

(குடி அரசு - சிறு குறிப்பு - 18.11.1928)

 
Read 67 times