Print this page

சுயமரியாதைப் பிரசாரங்கள் (குடி அரசு - அறிவிப்பு - 22.07.1928)

Rate this item
(0 votes)

சுயமரியாதைப் பிரசாரங்கள் பல இடங்களில் நடந்து வருவதாகச் செய்திகள் எட்டுகின்றன. அவற்றில் பேசுகிறவர்கள் பல மாதிரி பேசுவதாகவும், அதைக் கேட்கிறவர்கள் பல விதமாய் அர்த்தம் செய்து கொள்ளுவதாயும், சிற்சில சமயங்களில் விபரீத அர்த்தம் ஏற்பட்டு விடுவதாகவும் தெரிய வருகிறது. அவ்விபரீதத்தை நிறுத்துவதற்காக குறைந்தது பதினைந்து நண்பர்களை தயார் செய்யும் பொருட்டு ஈரோட்டில் ரயில்வே ஸ்டேஷனுக்கடுத்த திரு. வெங்கட்ட நாயக்கர் தோட்டத்திலுள்ள ஒரு கொட்டகையில் “சுயமரியாதைப் பிரச்சார போதனைக் கூடம்” என்பதாக ஒரு ஸ்தாபனம் ஏற்படுத்துவதாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

அதில் ஒரு மாத காலத்திற்கு, தினமும் இரண்டு காலம் ஒவ்வொரு மணி நேரம் உபந்யாசங்களின் மூலமும், மற்றும் சம்பாஷணை, ‘குடி அரசில்’ கண்ட வியாசங்கள் முதலியவை மூலமாகவும் கற்பித்துக் கொடுக்க முடிவு செய்திருக்கிறோம். காலாவதி யொன்றுக்கு பதினைந்து பேர்களை சேர்த்துக் கொள்ளக் கூடும். அவர்களில் சௌகர்யமில்லாதவர்களுக்கு இலவச சாப்பாடு போடப்படும். இஷ்டமுள்ளவர்கள் தெரிவித்துக் கொண்டால் ஏற்றுக் கொண்ட விஷயத்துக்கும் வர வேண்டிய விபரத்துக்கும் மற்ற நிபந்தனைகள் விபரத்துக்கும் தெரிவிக்கப்படும்.

- ஈ.வெ.ராமசாமி

(குடி அரசு - அறிவிப்பு - 22.07.1928)

 
Read 66 times