Print this page

ஸ்ரீனிவாசய்யங்காரும் மிரட்டலும் (குடி அரசு - கட்டுரை - 11.12.1927)

Rate this item
(0 votes)

ராயல் கமிஷனில் மகமதிய சமூகம் அதாவது எந்த எந்த மாகாணத்தில் அச்சமூகம் அதிகமாய் இருக்கின்றதோ அங்கெல்லாம் அதாவது பஞ்சாப், அலஹாபாத், கல்கத்தா முதலிய இடங்களிலுள்ள பிரபலஸ்தர்களும் மகமதிய பிரதிநிதிகளும் பஹிஷ்காரக் கூட்டத்தில் மகமதியர் சேரக் கூடாது என்று தீர்மானித்து விட்டதையறிந்த ஸ்ரீசீனிவாசய்யங்கார் அம்மகமதியர்களை மிரட்ட ஆரம்பித்திருக்கிறார். அதாவது பஹிஷ்கார இயக்கத்தில் மகமதியர்கள் சேராவிட்டால் சர்க்காருடன் தாங்கள் சேர்ந்து கொண்டு மகமதியர்களை துன்புறுத்த நேரிடும் என்று சொல்லுகின்றார்.

இது ஸ்ரீசீனிவாசய்யங்கார் சொல்லுவதல்ல. அந்த ஜாதி சொல்வதென்றுதான் சொல்ல வேண்டும். அக்கூட்டம் இதுவரை அப்படியேதான் செய்து வந்திருக்கின்றது. இந்து அரசாங்கத்தை ஒழித்து மகமதிய அரசாங்கத்தை கொண்டு வந்ததும் இந்த கொள்கைதான். மகமதிய அரசாங்கத்தை ஒழித்து வெள்ளைக்கார அரசாங்கத்தைக் கொண்டு வந்ததும் இந்த கொள்கைதான். இப்போது அந்த வெள்ளைக்கார அரசாங்கத்தை மிரட்டி தங்கள் ஆதிக்கத்தை பலப்படுத்திக் கொண்டு வருவதும் இந்த கொள்கைதான். ஆகவே சுயமரியாதை உள்ள மகமதியர்கள் இதற்குச் சரியான பதில் கடாவுவார்களே அல்லாமல் பயந்துகொண்டு ஸ்ரீஅய்யங்காருக்கு வால் பிடித்துக் கொண்டு திரிய மாட்டார்கள் என்று நினைக்கின்றோம்.

(குடி அரசு - கட்டுரை - 11.12.1927)

 
Read 61 times