பிராயச்சித்தம். குடி அரசு உரையாடல் - 16.08.1925

Rate this item
(0 votes)

ஒரு பெரிய மனிதர் வீட்டுக்கு ஒரு சாஸ்திரி வந்தார்.

பெரியமனிதர்:- வாருங்கள் சாஸ்திரிகளே, உங்களை வரவழைக்க வேண்டுமென்றிருந்தேன். நீங்களே வந்துவிட்டீர்கள்.

சாஸ்திரிகள்:- அப்படியா, என்ன விசேஷம்?

பெரியமனிதர்:- ஒன்றுமில்லை, ஒரு தத்துக்கிளியின் கழுத்தில் ஒரு பையன் கயிறுகட்டி இறுக்கி அதைக் கொன்று விட்டான். இதர்க்கேதாவது பிராயச்சித்தம் உண்டா?

சாஸ்திரிகள்:- ஆஹா உண்டு! அவன் பெற்றோர் தங்கத்தினால் 108 தத்துக்கிளி செய்து 108 பிராமணர்களுக்குக் கொடுத்துவிட்டால் அந்தப் பாவம் தீர்ந்துபோகும். இல்லாவிட்டால் அந்தப் பையனை பார்க்கவே கூடாது.

பெரியமனிதர்:- தத்துக்கிளியின் கழுத்தில் கயிறுகட்டி இறுக்கிக் கொன்றது தங்களுடைய மகன்தான், அதற்கு வேண்டியதை சீக்கிரத்தில் செய்துவிட்டு வாருங்கள்.

சாஸ்திரிகள்:- ஓஹோ! பிராமண பையனா அப்படியானால் இனிமேல் அப்படிச் செய்யாதே என்று சொல்லி விட்டால் போதும்.

குடி அரசு உரையாடல் - 16.08.1925 

Read 20 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.